
11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்!
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் ஓய்வு குறித்து...

வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் போஸ்டர் - படம்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட்
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் (36 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து இன்றுமுதல் (செப்.22) ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 11 ஆண்டுகள் விளையாடிய மார்க் வுட் இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். நான்கு ஆஷஸ் தொடர்களில் வெல்லவும் உதவியுள்ளார்.
மார்க் வுட் கடந்த 2015ல் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் 150+ கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர்.
38 டெஸ்ட்டில் 119 விக்கெட்டுகளும் 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளும் 38 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 2019 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற போதும் மார்க் வுட் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். காயத்துடனே இறுதிப் போட்டியில் பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் டி20 உலகக் கோப்பையை வென்றது. இதில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அதிவேகமாக பந்துவீசுவதால் அதிகமான காயம் ஏற்படுவதும் மார்க் வுட்டுக்குச் சிக்கலாக அமைந்தது. ”இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பெருமையானது. கனவு நனவானது என்றுதான் கூற வேண்டும். உலகம் முழுவதும் பயணித்து சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Mark Wood has announced his retirement from international cricket
— England Cricket (@englandcricket) September 22, 2026
He always gave everything for the Three Lions, on and off the field ð¦
What a career, what a player ð pic.twitter.com/d9keObjqbt
Summary
England pacer Mark Wood has announced his retirement from international cricket
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








