தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Ottneil Baartman

ஓட்னில் பார்ட்மேன் - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல் தர போட்டிகளில் விளையாடியபோது, ஓட்னில் பார்மேனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக மாற்று வீரராக அணியில் டுயன் யான்சென் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள டுயன் யான்சென் வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்செனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

South African fast bowler Ottniel Baartman has withdrawn from the ODI series against Australia due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.