காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

தப்பிப் பிழைக்குமா அன்பில் அவன்?- திரை விமர்சனம்

நடிகர்கள் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'அன்பில் அவன்' திரைப்பட விமர்சன் தொடர்பாக...

Anbil Avan Movie Review

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் அன்பில் அவன் - எக்ஸ்

Published On :

இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகி இருக்கிறது அன்பில் அவன் திரைப்படம்.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட சூர்யாவும் (அசோக் செல்வன்), இயலும் (ப்ரீத்தி முகுந்தன்) பிரபல நட்சத்திர விடுதிகளில் வேலை செய்கின்றனர். பணக்கார வீட்டுப் பெண்ணான இயல் காதலுக்காக தனது குடும்பத்தை உதறிவிட்டு கஷ்டப்படுகிறார். இதனால் கவலைக்குள்ளாகும் சூர்யா தன்னுடைய காதலியின் கனவான ஹோம் ஸ்டே எனப்படும் தங்கும் விடுதியை உருவாக்க முயற்சிக்கிறார்.

நல்ல மலைப்பகுதியில் பச்சை பசேல் சூழலுக்கு மத்தியில் அமைந்த ஒரு விடுதியை இருவரும் வாங்குகின்றனர். ஆனால் அந்த விடுதியை நடத்துவதற்கான அனுமதி பெறுவதில் அரசு அலுவலகங்கள் அவர்களை அலைக்கழிக்கின்றன. இதற்காக உதவி செய்யக்கோரி உள்ளூர் எம்எல்ஏவை அணுகுகிறார் சூர்யா.

சூர்யாவுக்கு உள்ளூர் எம்எல்ஏ உதவினாரா தாங்கள் நினைத்தபடி தங்களது கனவை சூர்யாவும் இயலும் நிறைவேற்றினரா? என்பதே அன்பில் அவன் திரைப்படத்தின் கதை.

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில்

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில்

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். காதல் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஒரு ஆக்சன் திரில்லர் வகையிலான திரைக்கதையில் அமைக்கப்பட்டிருக்கிறது அன்பில் அவன்.

காதலிக்காக அவளது கனவை நிறைவேற்றும் காதலனாக மின்னியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். காதலுடன் அவர் குழையும் இடங்களிலும், ஆற்றாமையில் வெடித்துச் சிதறுவதிலும் அசோக் செல்வன் சிறப்பாக நடித்திருக்கிறார். கோபம், இயலாமை, ஆக்ரோசம், தவிப்பு என அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற உணர்வுகளை நன்றாக கடத்தியிருக்கிறார். இவருடன் கதாநாயகியாக இணைந்திருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். வசீகரமான தோற்றம், கட்டிப் போடும் கண்கள் என காட்சிக்கு காட்சி ரசிக்க செய்கிறார். காதலும் கோபமும் கலந்த நடிப்பாக வெளிப்பட்டிருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன். அசோக் செல்வனிடம் அவர் கோபப்படும் இடங்களில் இயல்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கதிர் பாலு, மகா தில்லி கணேஷ், சாபமோன் அப்து சமத், ரேவதி என பலர் நடித்துள்ளனர்.

பிரீத்தி முகுந்தன்

பிரீத்தி முகுந்தன்

தன்னுடைய காந்தக் குரலால் மிரட்டி இருக்கிறார் கதிர் பாலு. எம்எல்ஏவாக அவருடைய மிரட்டலான காட்சிகள் வில்லத்தனத்திற்கு தீனி போடுகின்றன. இவர்களுடன் எரிச்சல் ஊட்டும் கதாபாத்திரங்களாக மகா தில்லி கணேஷ், அப்து சமத் ஆகியோரின் நடிப்பு கை கொடுத்திருக்கிறது.

காதல் காட்சிகளால் நிறைந்திருக்கும் முதல் பாதியில் விறுவிறுப்பை கொஞ்சம் கூட்டி இருக்கலாம். அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்காக கஷ்டப்படும் தம்பதிகளாக வரும் நாயகனும் நாயகியும் ஒரு இரவின் முடிவில் விடுதி திறக்கும் திட்டம், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதீத தன்னம்பிக்கை. விடுதிக்காக கேள்வி எழுப்பும் அசோக் செல்வனிடம், தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து எதையுமே சொல்லாமல் ரேவதி எப்படி இருந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. காவலர், வக்கீல், எம்எல்ஏ என புதிய இடத்தில் கலந்து கட்டி அடிக்கும் வில்லன்களின் கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் ஏனோ எடுபடவில்லை.

இரண்டாம் பாதியில் வில்லன்களின் தந்திரத்தை முறியடிக்கும் அசோக் செல்வனின் முயற்சி விறுவிறுப்பை கூட்டுகிறது. வில்லனிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் திரைக்கதையை சூடு பிடிக்க வைக்கின்றன. எனினும் அதன் பின் தோன்றும் சண்டைக் காட்சிகள் நீண்டு கொண்டே இருப்பது படத்திற்கு பலவீனம். முதல் பாதியில் தடுமாறி இருந்தாலும் இரண்டாம் பாதியில் கிடைத்த வேகத்தை சண்டைக் காட்சிகளில் இழந்து நிற்கிறது திரைப்படம்.

அன்பில் அவன் -   அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன்

அன்பில் அவன் - அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன்

20 நிமிடங்களுக்கு மேல் நீளும் விடுதியின் சண்டைக் காட்சி பொறுமையை சோதிக்கிறது. போதாக்குறைக்கு லாஜிக் மீறல்கள் சேர்ந்து கொள்ள கிளைமாக்ஸ் காட்சிகளின் மீதான ஆர்வம் குறைந்து விடுகிறது. பெரும் போர்க்களத்திற்கு பிறகு காலை வரை காத்திருந்து திடீரென நாயகி எழுந்திருப்பதெல்லாம் பொறுமையை சோதிக்கும் பாராமீட்டர்கள்.

பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு கை கொடுத்திருக்கின்றன. மர்மம் கலந்த அழகான விடுதியின் ஒளிப்பதிவு, காட்சிக்கு வலு சேர்க்கிறது. கத்தரித்து வீச பல காட்சிகளை படத்தொகுப்பாளர் தவறவிட்டிருக்கிறார்.

லாஜிக்குகளுக்காக யோசித்து பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் இடை சேர்க்கப்பட்ட, வெட்டி வீசப்பட வேண்டிய நீளமான அம்சங்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதை தவிர்த்திருக்கலாம்.

அன்பில் அவன் ஆக்சனை தவிர்த்து கொஞ்சம் காதலில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கும்.

Regarding the review of the movie Anbil Avan, starring Ashok Selvan and Preethi Mukundan...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.