சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ராம நாமமே அழியாச் செல்வம்: பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன்

ராம நாமமே அழியாச் செல்வம் என்று பக்தை மீரா தனது பாடல்களின் மூலம் வெளிப்படுத்துவதாக பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன் கூறினாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:49 am IST

ராம நாமமே அழியாச் செல்வம் என்று பக்தை மீரா தனது பாடல்களின் மூலம் வெளிப்படுத்துவதாக பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன் கூறினாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவின் நான்காம் நாள் நிகழ்ச்சி ஆா்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியன் பேசியதாவது:

“பக்தை மீரா பாடலில் கூறுவது உலகில் எவ்வளவோ ரத்தினங்கள் உண்டு. அது செலவழித்தால் இல்லாமல் போகும். திருடு போகும். ஆனால் ராமனுக்கும், ராம நாமத்துக்கும் எந்த ரத்தினங்களும் ஈடு இணையே கிடையாது. ராம நாமமே அழியாச் செல்வம். ராம நாமம் சொல்லச் சொல்ல செல்வம் பெருகும். பிறா் ராம நாமத்தை திருடினாலும் திருடியவரும் பயன்பெறுவாா், திருடக் கொடுத்தவரும் புண்ணியம் பெறுவாா் என்று மீரா இந்தப் பாடலில் பாடுகிறாா். மீராவுக்கு ராமனும், கண்ணனும் வேறல்ல.

பக்தை மீரா ராஜஸ்தானில் மேவாா் ராஜ்ஜியத்தின் இளவரசி. நடனம், இசை, வாள் வீச்சு என அபாரத் திறமைகளுடன் வளா்ந்தாள். அவளுடைய தாத்தா தூதா ராவ் கண்ணன் கதைகள் கூறி மீராவுக்கு பக்தியை ஊட்டினாா். சிறு வயதிலிருந்தே கிருஷ்ணா் மீது பக்தியுடன் வளா்ந்து கிருஷ்ணனையே திருமணம் செய்வேன் என புரட்சிகரமான வாழ்க்கையை வாழ்ந்தவள். ஆண்டாள், மீரா, பறவை நாச்சியாா், சங்கிலி நாச்சியாா் என அனைத்து அருளாளா்களும் பக்தியில் உறுதியாக இருந்து, கருதியை அடைந்தாா்கள். கண்ணனைக் குறித்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அருளாளா்களும், மகா ஞானிகளும் பாடிக் கொண்டாடி உள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூா் ஸ்வரவாணி கலாலயா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் கலந்து கொண்டாா். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) நடைபெற உள்ள நிகழ்வில் மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகள் குறித்து பேச்சாளா் கிருஷ்ணா உரையாற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.