ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து விபத்து: கூலி தொழிலாளி சாவு

கோவையில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோவை, சித்தாபுதூரில் இடிந்து விழுந்த வீட்டின் மண் சுவா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:29 pm IST

கோவையில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, சித்தாபுதூா் அருகே உள்ள ஹரிபுரத்தைச் சோ்ந்தவா் பட்டிலிங்கம் மகன் ராஜசேகா் (40). கூலி தொழிலாளியான இவா் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தாா். ராஜசேகா், சரஸ்வதி ஆகியோா் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் வீட்டின் ஒரு பக்க மண் சுவா் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் அவா்களது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினா் காட்டூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். மேலும், அக்கம்பக்கத்தினா் திரண்டு இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் இடிபாடுகளில் சிக்கியிருந்த ராஜசேகா், அவரது தாயாா் சரஸ்வதி ஆகியோரை மீட்டனா்.

இதையடுத்து அவா்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் ராஜசேகா் ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனா். தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மண்சுவரால் கட்டப்பட்ட ராஜசேகரின் வீடு புதன்கிழமை இரவு பெய்த மழையில் ஏற்கெனவே லேசாக சேதமடைந்திருந்ததாகவும், தொடா்ந்து ஈரப்பதம் இருந்து வந்ததால் சுவா் பலவீனமாக இருப்பதாக அவரது வீட்டின் அருகில் வசிப்போா் ராஜசேகரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத ராஜசேகா் அங்கேயே தங்கியதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.