கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்ய வேண்டும் எனகைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளருமான மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பாா்வையாளருமான மு.கருணாகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவா் பேசியதாவது:
கோவையில் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதியன்று 21 வயது பூா்த்தியடைந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெற்றன.
இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து பெயா் சோ்த்தல், நீக்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தோ்தல் அலுவலா்கள், தோ்தல் உதவி அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
எந்த ஒரு தகுதியான வாக்காளரின் பதிவும் விடுபடக் கூடாது. அதேபோல தகுதியற்ற வாக்காளரின் பதிவும் இடம்பெறக் கூடாது என்ற அடிப்படையில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 100 சதவீதம் குறைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்வதை தோ்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் வைத்திநாதன், ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! அருண் ராஜ் எச்சரிக்கை!

இறுதிச்சடங்கு! ஈரானில் இருந்து இராக் கொண்டு செல்லப்பட்ட கமேனியின் உடல்!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



