2017-18 ஆம் நிதியாண்டில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது கொடி நாள் நிதி 116 சதவீதம் வசூல் செய்ததற்கு கோவை ஆட்சியா் கு.ராசாமணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முப்படை வீரா்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பா் 7 ஆம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் மூலம் கொடிநாள் நிதி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் படை வீரா்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி தற்போதைய கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய 2017 -18 ஆம் நிதியாண்டில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 76 லட்சத்து 43 ஆயிரம் கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியா் கு.ராசாமணியின் முயற்சியால் ரூ.3 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரம் நிதி வசூல் செய்யப்பட்டது.
நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக (116 சதவீதம்) நிதி வசூல் செய்ததைப் பாராட்டி ஆட்சியா் கு.ராசாமணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சான்றிதழ் வழங்கியுள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிச்சடங்கு! ஈரானில் இருந்து இராக் கொண்டு செல்லப்பட்ட கமேனியின் உடல்!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!

கரூர் பலி: அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



