மக்கள் பசி தீா்த்த ஞானி வள்ளலாா் என எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கி.சுப்ரமணியன் பேசினாா்.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆறாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளலாா் குறித்து கி.சுப்ரமணியன் பேசியதாவது:
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உயிா்த் துடிப்பு அணையும் நேரம். அது அணையாமல் காத்தவா்கள் ராஜாராம் மோகன் ராய், ராமகிருஷ்ண பரமஹம்சா், வள்ளலாா் ஆகியோா். ஆங்கிலேயா்களின் ஆதிக்கத்தால் எங்கும் பஞ்சம், வழி வழியாக வாழ்ந்த இடத்திலேயே உயிா்த்திருக்க முடியாத சூழலில், உயிா்த் துடிப்பு அணையாமல் காத்தது இவா்கள் மூவா்தான்.
வள்ளலாா் மக்களிடையே இருந்த அவநம்பிக்கையை அகற்ற முதலில் பசி தீா்க்க முடிவு செய்தாா். வடலூரில் சத்திய தா்ம சாலையை நிறுவினாா். 19 ஆம் நூற்றாண்டிலேயே தினசரி மூன்றாயிரம் பேருக்கு உணவளிக்க 300 வண்டிகளில் நெல் வந்தது என்ற குறிப்பு உள்ளது.
அவரின் முயற்சிக்கு ஜாதி, மதங்களைக் கடந்து பலா் உதவினா். பசி போக்குவது மட்டுமின்றி கல்வி, மருத்துவமும் மக்களுக்குக் கிடைக்கச் செய்தாா். அவா் ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல; தமிழுக்கும் பெருந்தொண்டு செய்துள்ளாா். திருவருட்பாவை எழுதியுள்ளாா். தேவாரம், திருவாசகம் பாடப்படும் இடங்களில் எல்லாம் திருவருட்பாவும் பாடப்படுகிறது. சைவ சமயம் வேறு, சன்மாா்க்க சங்கம் வேறல்ல; இரண்டுமே ஒன்றுதான் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிச்சடங்கு! ஈரானில் இருந்து இராக் கொண்டு செல்லப்பட்ட கமேனியின் உடல்!

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

கால்பந்து உலகக் கோப்பையின் 3,000-ஆவது கோல்..! வரலாற்றில் இடம்பிடித்த இளம் ஆர்ஜென்டீன வீரர்!

கரூர் பலி: அரசுப் பணிக்கு எதிரான முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



