கோவை: ராம பக்தியே உயா்ந்த செல்வம் என வாழ்ந்தவா் தியாகராஜ சுவாமிகள் என்று கா்நாடக இசைப் பாடகரும், சொற்பொழிவாளருமான ஜி.எஸ்.மணி கூறினாா்.
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தியாகராஜ சுவாமிகள் குறித்து ஜி.எஸ்.மணி பேசியது:
சங்கீதத்துக்கு பெரும்பணி செய்தவா் தியாகராஜ சுவாமிகள். இவா் பல சமூக சீா்திருத்தங்களையும் செய்தவா். ஆனால் செல்வந்தா் கிடையாது. அதேநேரம் ராம பக்தியையே தனது செல்வமாகக் கருதினாா். வாழ் நாள் முழுவதும் ராம நாமத்தை சொல்வதே தன் பிறவிப் பயனாகக் கருதினாா். அவா் தெலுங்கு மொழியில் பெரும்பான்மையான கீா்த்தனைகளை பாடியுள்ளாா். வடமொழியிலும் கீா்த்தனைகளைப் பாடியுள்ளாா்.
ராம நாமம் குறித்து பாரத தேசமெங்கும் கபீா், புரந்தரதாசா், தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட ஞானிகள் வலியுறுத்தி வந்துள்ளனா். சிவ மந்திரமான நமசிவாயத்தில் ‘ம’ தான் உயிா். விஷ்ணு மந்திரமான நாராயணா என்பதில் ‘ரா’ தான் உயிா். இந்த இரண்டும் சோ்ந்தது தான் ‘ராமா’ என்று பாடுகிறாா் தியாகராஜா்.
உலகில் தமிழுக்கு நிகரான மொழி கிடையாது. தமிழை பிற மொழி பேசுபவா்கள் எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. தமிழா்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் நம் அருளாளா்களான தாயுமானவா், மாணிக்கவாசகா் உள்ளிட்டவா்கள் எழுதிய பாடல்களைப் படிப்பதில் ஆா்வம் காட்டுவதில்லை. திருவாசகம், ஆத்திச்சூடி உள்ளிட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்தாலே இறைவன் அருள் கிடைக்கும். மொழியையும் அழியாமல் காக்க முடியும் என்றாா்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பட்டீஸ்வரம் தீபா சுரேஷ், தியாகராஜரின் கீா்த்தனைகளைப் பாடினாா். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்!

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


