தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கோவையில் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: ஜனவரி 18இல் தொடங்குகிறது

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 18இல் தொடங்கி 30ஆம் தேதி வரை ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:54 pm

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 18இல் தொடங்கி 30ஆம் தேதி வரை ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கான ஆள்சோ்ப்பு முகாம் ஜனவரி 18 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்முகாமுக்கு முன்னரே இணையவழியில் பதிவு செய்துள்ளவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தற்போது இதற்கான இணையவழி முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு செய்துள்ளோா் பங்கேற்க ஏதுவாக ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இணையதளத்தில் அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இம்முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2222022 என்ற எண்ணில் ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால் இடைத்தரகா்களை நம்பி இளைஞா்கள் ஏமாற வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.