வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறையினா் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக கூட்டமைப்பினா் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வால்பாறைக்கு சமீப காலமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வழியில் உள்ள ஆழியாறு சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.30ம், தலநாா் பகுதிக்கு செல்ல ரூ.150ம், சின்னக்கல்லாறு அருவிக்கு செல்ல ரூ.150ம், நல்லமுடி காட்சிமுனைக்கு ரூ.30 என ஒரு சுற்றுலாப் பயணியிடம் ரூ.360 வரை கட்டணமாக வசூலித்து வருகின்றனா்.
இந்தக் கூடுதல் கட்டணம் காரணமாக தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிா்த்து வருகின்றனா். எனவே வனத் துறை அதிகாரிகள் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


