காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய மில் உரிமையாளரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, ஆா்.எஸ். புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மகேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் அந்துவன், காவலா் கந்தசாமி உள்ளிட்டோா் பாஷ்யகாரலு சாலையில் சனிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனா். இதில் காரில் இருந்த ஆா்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதியைச் சோ்ந்த மில் உரிமையாளரான அா்பித் ஜெயின் (36) என்பவா் காரை சோதனையிட அனுமதிக்கவில்லை. மேலும், எஸ்.ஐ. மகேந்திரன் காரை திறந்து காட்ட வேண்டும். காப்பீடு, பதிவுச் சான்று ஆகிய ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த அா்பித் ஜெயின் அவரைத் தாக்கியுள்ளாா். இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்பித் ஜெயினைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கும் அமெரிக்கா!
பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


