மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அண்ணன் வீட்டில் 40 பவுன்  திருடிய தம்பி கைது

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே அண்ணனின் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிய அவரது தம்பியை

Updated On :2 மே 2013, 12:16 pm IST

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே அண்ணனின் வீடு புகுந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிய அவரது தம்பியை புவனகிரி போலீஸார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புறப் பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் (52) தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

முரளிதாஸ் கடந்த ஒரு மாதமாக கடன் தொல்லையால் வெளியூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணன் பிரேமநாதன் குடும்பத்துடன், முரளிதாஸ் மனைவியையும் அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று மாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.

இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் மூலம் தம்பி முரளிதாஸை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாகம் பிரிக்காததாலும், கடன் தொல்லை தாங்க முடியாமலும் நகைகள் மற்றும் ரொக்கத்தைத் திருடியதை முரளிதாஸ் ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீஸார் முரளிதாஸை கைது செய்து, நகைகளை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.