மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோயில் விழா தகராறு: இளைஞர் கொலை

நெய்வேலி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் ஈடுபட்ட மற்றொருவரை

Updated On :2 மே 2013, 12:15 pm IST

நெய்வேலி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் ஈடுபட்ட மற்றொருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நெய்வேலி வடக்குமேலூர் அங்காளம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் இம்மாதம் 26-ம் தேதி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த நல்லாமூர்த்திக்கும் (27), தரணிக்கும் (22) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அப்போது தரணி, நல்லாமூர்த்தியை பழிக்குப் பழி வாங்குவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நல்லாமூர்த்தி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார்.  அப்போது அங்கு வந்த தரணி, நல்லாமூர்த்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.

பலத்தக் காயமடைந்த நல்லாமூர்த்தியை உறவினர்கள் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் திங்கள்கிழமை இறந்தார்.

இதையடுத்து நல்லாமூர்த்தியின் மனைவி காந்திமதி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடி தலைமறைவாக இருந்த தரணியை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.