ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பைக்கில் சென்ற என்.எல்.சி. ஊழியர் விபத்தில் சாவு

நெய்வேலியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்எல்சி ஊழியர், நடந்துசென்ற மற்றொரு என்.எல்.சி. ஊழியர் மீது மோதியதில்

Updated On :2 மே 2013, 6:45 am

நெய்வேலியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்எல்சி ஊழியர், நடந்துசென்ற மற்றொரு என்.எல்.சி. ஊழியர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தார்.

நெய்வேலி வட்டம், 25-ஐ சேர்ந்த செல்வானந்தமும், வட்டம் 27-ஐ சேர்ந்த உதயசூரியனும் என்.எல்.சி. முதல் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் உதயசூரியன் சனிக்கிழமை நெய்வேலி காமராஜ் சாலையில் நீச்சல்குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த செல்வானந்தம், நடந்துசென்ற உதயசூரியன் மீது மோதியுள்ளார்.

இதில் உதயசூரியன் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்துள்ளார். செல்வானந்தம், அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான உதயசூரியன் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக உதயசூரியனின் மனைவி தேன்மொழி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.