அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மே 8-ல் நடுநிலை, பிளஸ்1 தேர்வு முடிவுகள்

கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Updated On :2 மே 2013, 12:17 pm IST

கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் எடுத்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பொதுத் தேர்வுகளைத் தவிர்த்து இதர வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்து, ஏப்ரல் மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை விரைவில் முடித்து, மே மாதம் 8-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாகிறது. ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.