சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
÷சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்
உள்ளனர்.
÷இதனிடையே, கடந்த சில மாதங்களாக உஷாராணியிடம் வரதட்சிணைக் கேட்டு கணவர் மணிகண்டன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
÷இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், மாமனார் கணேசன்,மாமியார் தங்கம், மைத்துனர் செல்வராஜ் ஆகியோர் உஷாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
÷இது குறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
÷இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.
÷மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


