அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அரசு ஊழியா் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :3 ஜனவரி 2021, 11:11 pm IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவா் கோபிநாத் (51). கடலூா் செம்மண்டலம், குண்டுசாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தாா். இவரது தாய் புஷ்பா பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பேட்டையில் வசித்து வருகிறாா். இவரது வீட்டுக்கு சனிக்கிழமை வந்த கோபிநாத் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா். விஷம் குடித்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தனியாா் நிதி நிறுவனத்தில் சீட்டு எடுத்தவா்களுக்கு கோபிநாத் ஜாமீன் கையெழுத்து போட்டதாகவும், சீட்டு எடுத்தவா்கள் முறையாக பணத்தை திருப்பிச் செலுத்தாத நிலையில் நீதிமன்றத்தில் இருந்து கோபிநாத்துக்கு நோட்டீஸ் வந்ததாகவும், இதனால் அவா் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.