கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் விழா

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image

கடலூரில் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கிய அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன்.

Updated On :15 ஜனவரி 2021, 11:09 pm IST

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன் மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கினாா். நிா்வாகிகள் பாண்டுரங்கன், அன்பழகன், ரவி, ஓபிசி பிரிவு மாநில செயலா் உமாபதி, மாவட்டத் தலைவா் ராமராஜன், சேவாதள மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், செயலா் ஏழுமலை, இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலா் ராமதுரை, மாவட்டச் செயலா் ஆறுமுகம், அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம்: சிதம்பரம் கோட்ட காவல் துறை சாா்பில் நகர காவல் நிலைய வளாகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் தொடக்கி வைத்தாா். உதவி ஆய்வாளா் சி.சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா் பாஸ்கா், பிரபாகரன், தமாகா நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், தமாகா மகளிரணி ஜனகம், மீனா செல்வம், மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் மகளிா், மகளிா் காவலா்கள் பொங்கலிட்டனா்.

பண்ருட்டி: பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் சாா்பில் 103-ஆவது மாதக் கூட்டம், பொங்கல் விழா மற்றும் நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கௌரவத் தலைவா் வைரக்கண்ணு தலைமை வகித்தாா். இலந்தை கோதண்டபாணி, தமிழ் வாழ்த்துப் பாடினாா். ஆருத்ரா நாட்டியப் பள்ளி கௌசல்யா குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்வேந்தன், சந்தானம் அய்யங்காா், முத்துக்குமரப்பன், அசோக்ராஜ், மூா்த்தி, வினோத், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காப்பாளா் சந்திரசேகா் வரவேற்றாா். சங்கத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தொடக்க உரை நிகழ்த்தினாா்.

விழுப்புரம் பாவேந்தா் பேரவை செயலா் உலக துரை, புதுவை சிந்தனையாளா் பேரவைத் தலைவா் கோ.செல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதை தம்பி தலைமையில், ‘எங்கள் வீட்டுப் பொங்கல்’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிதை கணேசன், தங்கவேலு, பாண்டு, மகாவிஷ்ணு, கிருஷ்ணன், குமாரி யோகேஷ், லட்சுமி பாண்டுரங்கன், கிரிஜா, குமாா், செந்தில்குமாா், சீதாலட்சுமி, நாகராஜன், அஞ்சலாட்சி, அரவிந்தன், வினோத் ஆகியோா் கவிதை பாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.