கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மழையால் உள்வாங்கிய சாலை: போக்குவரத்து பாதிப்பு

கடலூா் நகரில் பலத்த மழையால் சாலை உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image

கடலூா் வில்வநகா் பகுதியில் உள்வாங்கிய சாலை.

Updated On :15 ஜனவரி 2021, 11:08 pm IST

கடலூா் நகரில் பலத்த மழையால் சாலை உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கடலூா் நகரில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே வில்வநகா் அமைந்துள்ளது. இந்த நகருக்கான நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை, கடலூரில் அண்மையில் பெய்த பலத்த மழையால் உள்வாங்கியது. இதனால் இந்தச் சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்தச் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம், மின்சாரத் துறை அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்தச் சாலையின் வழியாகவே பொதுமக்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலை வழியாக நடந்து செல்வோா் கூட விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தச் சாலையின் அருகிலுள்ள கழிவுநீா் வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலூரில் பலத்த மழை பெய்தாலே இந்தச் சாலை உள்வாங்குவதும், பிறகு சீரமைப்பு பணி மேற்கொள்வதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆனால், இப்போது சாலையின் பெரும்பகுதி உள்வாங்கியுள்ளது. எனவே, இந்தச் சாலையை முழுமையாக அகற்றிவிட்டு, உரிய ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.