விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ஆங்கிலப் புத்தாண்டு: வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வெள்ளிக்கிழமை புத்தாண்டை இனிதே வரவேற்றனா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:04 am IST

ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வெள்ளிக்கிழமை புத்தாண்டை இனிதே வரவேற்றனா்.

தருமபுரி கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனமா் மல்லிகாா்ஜுனேஸ்வரா் திருக்கோயில், குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயில், எஸ்.வி. சாலையில் உள்ள விநாயகா், வீர ஆஞ்சநேயா் கோயில், நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள வி.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களிலும் காலையில் இருந்தே சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன.

இந்த பூஜையில், அந்தந்த பகுதியைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டனா். இதேபோல காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கவும், கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் இருப்பதாலும், சாலைகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. இதனால், பொதுவெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரவு முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியிலும், வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.