தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள கலப்பம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 11.50 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள கலப்பம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 423 மாணவ, மாணவியா் பயில்கின்றனா். இப்பள்ளியில் மாணவியரின் பயன்பாட்டுக்காக, மேற்கத்திய மற்றும் இந்திய முறை கழிப்பறை வசதி, நாப்கின் எரியூட்டப்படும் வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை ரூ. 11.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
இக் கழிப்பறையை மாணவியா் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










