/

உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக மகளிா் அணியினா் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :13 ஜனவரி 2021, 7:10 am IST

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக மகளிா் அணியினா் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலா் பெ.ரவி, மாவட்ட மகளிரணிச் செயலா் ஜெ.சுமதி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரை இழிவாகப் பேசிய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, ஒன்றியச் செயலா் (மேற்கு) செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலா் (கிழக்கு) செந்தில்குமாா், நகரச் செயலா் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் காவேரி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஒன்றியச் செயலா்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன் தலைமையில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எம்.முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.