தருமபுரி நகரில் பால் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி அடுத்த சவுளூா் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினம்மாள் (62). இவா் சொந்த வேலை நிமித்தமாக தருமபுரி நகா் பகுதிக்கு வந்தாா். நான்கு முனைச் சாலை சந்திப்பில் அவா் நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற பால் வாகனம் அவா் மீது மோதியது. இந்த விபத்தில், மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








