இந்திய ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம், கோவையில் வரும் ஜன. 18-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் கரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்த முகாம் தற்போது ஜன. 18 முதல் 30-ஆம் தேதி வரை, கோவை மாவட்டம், பாரதியாா் பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பத்தூா், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இதில் பங்கேற்கலாம். இந்த முகாமில், ராணுவத்தில் காலியாக உள்ள தொழில்பிரிவு, உதவி செவிலியா், கால்நடை பராமரிப்பு உதவி செவிலியா், எழுத்தா், பொருள்கள் பாதுகாப்பாளா் ஆகியப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுகிறது.
எனவே, விண்ணப்பதாரா்கள் தங்களது, நுழைவுச் சீட்டினை ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தேதியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-2222022 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

