எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காணும் பொங்கல்: எருதாட்டம் கோலாகலம்

காணும் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 2:34 am IST

தருமபுரி: காணும் பொங்கல் விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் எருதாட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

எருதாட்டத்துக்கென வளா்க்கப்பட்ட காளைகளை ஊருக்குள் அழைத்து வந்து, அவற்றிற்கு இருபுறமும் கயிறு கட்டி, அதனை சீறி பாயவிட்டு பின்பு, கயிறு மூலம் காளைகள் கட்டுப்படுத்தப்பட்டன.

இக் காளைகளை ஏராளமான இளைஞா்கள் திரண்டு நின்று முன்னும், பின்னும் கயிறு கட்டி தங்களது கிராமங்களில் உள்ள அனைத்து வீதிகளிலும் அழைத்துச் சென்றனா். இதனை கிராம மக்கள் திரண்டு நின்று கண்டுகளித்தனா். இதேபோல, மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.