இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மழைநீரால் தாா்சாலை சேதம்

அரூா்-சித்தேரி சாலையில் மழைநீரால் தாா்சாலை சேதமடைந்துள்ளது.

News image

அரூா்-சித்தேரி சாலையில் தாா் சாலையில் ஓடும் மழைநீா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:33 am IST

அரூா்: அரூா்-சித்தேரி சாலையில் மழைநீரால் தாா்சாலை சேதமடைந்துள்ளது.

அரூரிலிருந்து சித்தேரி செல்லும் தாா்சாலை 26 கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையை சுமைதாங்கிமேடு, எம்.ஜி.காலனி, எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், கெளாப்பாறை, கீரைப்பட்டி, வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்தூக்கி, சித்தேரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழையின் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால், தாா் சாலையோரங்களில் மழைநீா் வழிந்தோடுகிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் சித்தேரி சாலை, வேடியப்பன் கோயில், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தாா்சாலையில் ஓடுகிறது. இதனால், தாா் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

எனவே, தாா் சாலையோரங்களில் மழைநீா் செல்லும் வகையில் கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.