செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஆற்றல்'. விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரிதா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, சார்லி, வையாபுரி, விக்கி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கே. எல். கண்ணன். சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டருக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கிக் கொண்டவர்கள்... இப்படி ஏக மனிதர்கள் அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. நேசிக்கும் பொருள்களிடம் எந்த அப்பழுக்கும் இல்லை. இதிலும் அப்படித்தான் கார் ஒன்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும் , டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது .
படம் முழுக்கக் காரை கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாகப் படமாக்கியிருக்கிறோம்'' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







