தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கல்விச் சுற்றுலாவுக்காக சொந்தமாக ரயில் வாங்கப்படும்: தில்லி பல்கலைக்கழகம்

கல்வி கற்கும் முறையை வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் செல்லும் முயற்சியாக, கல்விச் சுற்றுலாவுக்காக தில்லி பல்கலைக்கழகம் சார்பில்

News image
Updated On :2 மே 2013, 12:59 pm IST

கல்வி கற்கும் முறையை வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் செல்லும் முயற்சியாக, கல்விச் சுற்றுலாவுக்காக தில்லி பல்கலைக்கழகம் சார்பில் சொந்தமாக ரயில் வாங்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் கூறினார்.

""பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் "ஞானோதயா' என்ற பெயரில், ரயில் மூலமாக நாடெங்கும் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக ரயில்வேயிடம் வாடகைக்கு ரயில் எடுக்கப்படுகிறது. தற்போது, இதற்காக ரயிலை சொந்தமாக வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன'' என்று புதன்கிழமை நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக 91-ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் துணைவேந்தர் தினேஷ் சிங் கூறினார்.

""இதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான நிதியை தில்லி அரசு வழங்கும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் உறுதி அளித்துள்ளார்'' என்றும் தினேஷ் சிங் குறிப்பிட்டார். 

முதல்வர் ஷீலா தீட்சித் பேசுகையில், ""பிற பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடுவதற்கும், கல்வி மேம்பாட்டுடன், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தவதற்கும் "ஞானோதயா ரயில்' போன்ற வித்தியாசமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தில்லி பல்கலைக்கழகம் தற்போது செயல்படுத்தும் திட்டங்களை வருங்காலத்தில் பிற பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தும்.

தில்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த நானும், எனது கணவரும் மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றோம். அந்த பல்கலைக்கழகத்தையும்  தில்லி பல்கலைக்கழகம் போலவே உணர்ந்தேன்'' என்றார். பல்கலைக்கழக பதிவாளர் அல்கா சர்மா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.