தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

எழுதியதைப் படிப்போம், எழுத்தாளனை ...

உயிரினங்கள் அனைத்துக்கும் உணர்ச்சிகள் பொதுவானவை. உலகில் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் தான் துன்புறுத்தப்படும்போது உணர்ச்சிகளை ஏதேனும் ஓர் வடிவில் வெளிப்படுத்துகிறது.

Updated On :

உயிரினங்கள் அனைத்துக்கும் உணர்ச்சிகள் பொதுவானவை. உலகில் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் தான் துன்புறுத்தப்படும்போது உணர்ச்சிகளை ஏதேனும் ஓர் வடிவில் வெளிப்படுத்துகிறது.

மரத்தை வெட்டினால், மழையை அளிக்காமல் மனிதனுக்குத் தண்டனை அளிக்கிறது இயற்கை.

மனிதர்களும் அப்படித்தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். முன்யோசனை இல்லாதவனுக்குக் "கோபம்', இயலாதவனுக்கு "அழுகை', துணிவில்லாதவனுக்கு "டாஸ்மாக்', அதிகாரத்தில் இருப்பவனுக்கு "கடைநிலை ஊழியர்' என ஏதேனும் ஒரு வடிவில் உணர்வுகளை வடியச் செய்கின்றனர். இவர்களுக்கெல்லாம் முடிவாக, மேற்கூறிய உணர்வுகளை எழுத்து வடிவில் உலகுக்குத் தெரிவிப்பவன் எழுத்தாளனாகிறான்.

திறமை வாய்ந்த புலவர்களைக் கொண்ட மன்னனின் அமைச்சரவையில் ஆரோக்கியமான கருத்துகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதையறிந்ததாலேயே அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி, மரணத்தை வெல்லும் நெல்லிக்கனியை ஒüவை பிராட்டிக்கு அளித்தான்.

ஆண்டுதோறும் புதிதாக எதனை எழுதிவிட முடியும் என்ற ஐயம் பொதுவாக எழுவது நியாயமே. உலகில் ஏற்கெனவே இருக்கும் பொருள்களைக் கொண்டு மட்டும்தான் புதிய பொருளை உருவாக்க முடியும்.

இல்லாத ஒன்றை யாரும் கண்டுபிடிக்க முடியாது. இருந்தும், பலரது கண்ணுக்கு புலப்படாத ஒன்றைத்தான் மற்றொருவர் கண்டறிய முடியும்.

அவ்வாறுதான் எழுத்துகளிலும். ஒüவையார் கூறிய கருத்துகளை தற்போது வேறொரு கவிஞர் வேறு கோணத்தில் கூறுவார். இரண்டும் வேறுவேறாக இருந்தாலும் கருத்தின் மையப்புள்ளி ஒன்றுதான்.

தாயைப் பற்றி வள்ளுவரும், ஒüவையாரும் வெவ்வேறு எழுத்துகளில் கூறியிருந்தாலும், அவர்கள் போற்றியது தாய்மையைத்தான்.

மையப்புள்ளி ஒன்று போதும்; திறமையுள்ளவன் அதிலிருந்து எந்த வடிவத்தையும் பார்வையாளனுக்கு அளிக்க முடியும்.

இவ்வாறு ஏதேனும் ஒரு மையத்தை வைத்து, நூல்கள் பல படைத்தும், கருத்துகள் பல கூறியும் பயன்தான் என்ன?

கல்வியறிவு அற்ற காலங்களில் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு தவறு செய்ய அஞ்சினான் மனிதன்; எதற்கும் கட்டுப்படாதவனாக கல்வியறிவுடையவன் மாறி விட்டானே? காரணம், தத்துவங்களைக் கேட்பவன் உள்வாங்கத் தவறுவதிலும், இலக்கியங்களைப் படிப்பவன் அதன்படி நடக்க மறுப்பதிலும் ஏற்படும் பிழைகள்.

"எழுத்துகளைப் படிப்பவன், அவ்வாறு நடப்பது இருக்கட்டும்; அதனை எழுதுபவன் முதலில் அவ்வாறு நடக்கிறானா?' என்பது வாசகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அடுத்தவர்களுடன் ஒப்பிடும் சிறுவயது பழக்கத்தை, நாம் இன்னும் மாற்றிக் கொள்ளாததே இக்குற்றச்சாட்டுக்குக் காரணம்.

நம்முடைய தேவை என்ன என்பதை ஒருவன் முதலில் உணர வேண்டும். அதை உணர்ந்தாலே மனிதனைப் பின்னிலைப்படுத்தும் குணங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

தான் உணர்ந்தவற்றை ரசனையுடன் எழுதுவது எழுத்தாளன் வேலை. அவன் எப்படிப்பட்ட குணத்தோடு இருந்தால் நமக்கென்ன? அவன் கூறும் கருத்து புதிதாகவோ, பயன் தருவதாகவோ இருப்பதாக உணர்ந்தால் அதன்படி நடக்க முயற்சி செய்யலாம். அது, படிப்பவனுக்குத்தான் பயனைத் தருமே தவிர, அவனுக்கல்ல.

நாக்குக்கு கசப்பை அளிக்கும் பாகற்காய், உடலின் மற்ற பாகங்களுக்கு நன்மையைத்தானே அளிக்கிறது? பயனை நோக்கித்தானே பயணம் அமைய வேண்டும்!

எழுத்தாளன் மரணிக்கலாம்; அவனது எழுத்துகள் பல தலைமுறையை தலைநிமிர்த்த உதவும். எழுத்துகளே நமக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டுமே தவிர, எழுத்தாளன் அல்ல.

நாம் ரசிக்க வேண்டியது எழுத்துகளைத்தானே தவிர, எழுத்தாளனை அல்ல. நமது எதிர்பார்ப்பை எழுத்தாளன் ஏமாற்றினாலும், அவனது எழுத்துகள் படகில் அமர்ந்திருக்கும் நமக்கு சரியான திசையை நோக்கிப் பயணிக்கவும், கரையைக் கடக்கவும் துடுப்புபோல உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.