ஒய் திஸ் கொள்ள ஹரி?
எல்லாத் துறைகளிலும் சுமுகமான சுற்றுச்சூழல் இயற்கையிலேயே அமைந்திருப்பது தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய அனுகூலமாகும்.
எல்லாத் துறைகளிலும் சுமுகமான சுற்றுச்சூழல் இயற்கையிலேயே அமைந்திருப்பது தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய அனுகூலமாகும். உயர்கல்வி பெற பலர் முன்வருவதற்கு இது ஒரு காரணம். தொழில்துறை, சமூக அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், நீதிசார் நிலையங்கள், ஊடகங்கள், மருத்துவமனை ஆகியவற்றிடையே தூய்மையான உயர்கல்வி முறை நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் தருகிறது. இங்கே தகவல் தொழில் நுட்பம் வலுவான நிலையில் உள்ளது. உற்பத்தி, தானியங்கி வாகனங்கள், அவற்றிற்குரிய உறுப்புகள், மருந்து பொருள்கள், ஜவுளி உற்பத்தித் தொழில், உயர்ரக மருத்துவக் காப்பக வசதி மற்றும் விரைந்து செயல்படும் நீதித்துறை, பொறுப்புள்ள சமூக அமைப்புகள், ஊடகப் பிரிவுகள் போன்றன தமிழகத்தின் பெருமையை உச்சாணிக் கிளையில் வைத்துள்ளன. இப்படிப்பட்ட சூழலால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் பல உள்ளன. வாய்ப்புகள் பொறியியல் துறையோடு நில்லாமல் மருத்துவம், சட்டம், மேலாண்மை, இதழியல், சமூக அறிவியல் போன்ற பல துறைகளிலும் உள்ளன என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு தொடக்கக் கல்விக்கும் உயர் கல்விக்கும் வரவு-செலவு அறிக்கையில் ஒதுக்கும் நிதி தமிழகத்தில் உயர்கல்வி ஊக்கம்பெற கிரியா ஊக்கியாக உள்ளது. தொழில்சார் வெற்றிக்கு மருத்துவக் கல்வியும் பொறியியல் படிப்பும்தான் பாதை வகுக்கும் என்ற எண்ணம் மாற வேண்டும். பிற துறைகளில் பயின்றாலும் வெற்றி நிச்சயம் என்ற எண்ணம் வளர வேண்டும்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்சார் படிப்புக்களுக்கு நாளுக்கு நாள் மோகம் பெருகி வருகிறது. யார் அதிகத்தொகை கொடுக்கிறாரோ அவருக்கே தொழிற்படிப்புகளில் இடம் என்கிற நிலை உருவாகிவிட்டது. கட்டாய நன்கொடையைத் தடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. இருந்தும் மோகமும் வேகமும் கண்ணை மறைக்கின்றன. இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் தகுதி அடிப்படையிலான சேர்க்கை முறையில் (ஒஉஉ) தங்களை உட்படுத்திக் கொள்ள இயல்பான விருப்பம் மாணவர்களுக்கு உண்டு. இந்தக் கல்விச் சுற்றுச்சூழலில் நிலவும் கடுமையான போட்டியை பெற்றோர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். ஆகையால் விரிக்கப்பட்ட மாயவலையில் விழுந்து மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியில் பணபலத்தால் இடம் பிடித்துவிடுகின்றனர். கல்லூரியில் சேரும் பெண்ணோ ஆணோ இதனைப் பெரிதாக நினைப்பார்களா இல்லை, மாற்று வழியான தகுதி அடிப்படையில் சேர்வதைத்தான் பெரிதாகக் கருதுவார்களா? எதிர்காலத்தில் அவ்வத்துறையில் பட்டதாரிகளாகப் போகின்றவர்கள் உள்ளத்தில் இப்படியொரு எண்ணம் வரலாமா? அப்படிப்பட்ட ஒருவர் டாக்டராகவோ என்ஜினியராகவோ எப்படி பரிணமிக்க முடியும்? பிள்ளைகளைப் பெற்றவர்கள் நன்கொடைதான் நல்ல விடை என்ற தவறான எண்ணத்தை விட்டுவிட்டுத் திறமைதான் தாரக மந்திரம் என்று உணர வேண்டும். பன்முக நுழைவுத் தேர்வு எனும் நோய் கிருமிக்குப் பெற்றோர்களும் பிள்ளைகளும் பலியாகாமல் இருப்பதற்கு மருந்து கண்டாக வேண்டும். நுழைவுத் தேர்வுகளிலும் எத்தனையோ வகை உண்டு. அதில் எந்த நியாயத்திற்கும் உள்படாத விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் என்பது ஒருவகை. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துவிட்டு கடைசித் தேதி ஏதோ ராணுவ ரகசியம் போல அதை அறிவிக்காமல் இருப்பது மற்றொரு வகை. "மாய வலை பின்னப்பட்டு விடை காணமுடியாத புதிர்' என்று நீதிபதி கிருஷ்ணய்யரால் வர்ணிக்கப்பட்ட முறை மற்றொருவகை. சிலருக்குத் தங்கள் மனக்கவலைக்கு அளிக்கப்படும் மருந்தாக அனைத்து நுழைவுத் தேர்வுகளும் தெரிகின்றன. மாணவர் சேர்க்கை எனும் போலிப் பாவனைக்குரிய முத்திரையாகக் கருதுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு உண்டா? கட்டாயம் உண்டு.
தேசியக் கல்விக் கொள்கை 1986, நிகழ்ச்சி செயல்திட்டம் 1992 ஆகிய இரண்டும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்குரிய தேசியத் தேர்வு வசதிக்கு (சஹற்ண்ர்ய்ஹப் பங்ள்ற்ண்ய்ஞ் ஊஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) தீர்க்க தரிசனத்தோடு அடித்தளம் அமைத்து கொடுத்தது. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவையும் (மஎஇ) மாநில அரசுகளையும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என அது வற்புறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்களின் திறத்தினை ஒப்பியல் நோக்கில் மதிப்பீடு செய்ய நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று கருத்துரைத்தது. நுழைவுத் தேர்வு என்பது ஒரே மாதிரியான தரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும். பள்ளித் தேர்வுகள் நடத்தும் பல்வேறு நிறுவனங்களின் தேர்வு முறையில் உள்ள மாறுபாடுகளையெல்லாம் சீர்படுத்தி இத்தேர்வு ஒருமுகப்படுத்துகிறது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு கூறுகிறது. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைக்குத்தான் இது பொருந்துமேயன்றி, வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் உள்ள சேர்க்கைக்கு இது பொருந்தாது என்றும் தன் நிலைப்பாட்டை உச்சநீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. நூற்றுக்கு நூறு நுழைவுத் தேர்வு என்பது ஒரு கானல் நீர் என்றும் நாட்டின் அனைத்துத் தரத்தவர்க்கும் இது எட்டாக் கனியென்றும் இணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கெல்லாம் (ஒஉஉ) வாய்ப்பு வசதிகள் இல்லாதவர்களுக்கு சாத்தியமில்லை என்றும் கருதித்தான் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பொதுவான நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களையும் சேர்த்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அறிவிப்புச் செய்தது. இதனை பல்வேறு மாநில அரசுகளும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் கடுமையாக எதிர்த்தன. ஜூன் 2012இல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் கூட்டப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குரிய கூட்டத்தில் அந்த அறிவிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த மிகச் சிலரில் இக்கட்டுரையாசிரியரும் ஒருவர் ஆவார். மாநிலம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணம் இதனை எதிர்ப்பதற்கு இருந்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பதற்குரிய பின்னணிதான் என்னவென்று புரியவில்லை. அவர்களுடைய தன்னாட்சியில் இது குறிக்கிடும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. ஏற்கத்தக்கதும் இல்லை. இணை நுழைவுப் பொதுத்தேர்வு (ஒஉஉ) மதிப்பெண்களையும் பிளஸ் 2 மதிப்பெண்களையும் சேர்த்துத் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து மாணவர் சேர்க்கையை தாங்களாகவே முறையாக நடத்துவதில் எந்தவிதக் குறுக்கீடும் இருப்பதாகத் தெரியவில்லை. இது வெறும் கற்பனையால் வரும் அச்சமே தவிர வேறொன்றும் இல்லை. பிறகு ஏன் புகழ் வாய்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதத்தோடு தங்கள் நுழைவுத்தேர்வை திணிக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. இதில் இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. பெருத்த வருவாய் இழப்பீடு வந்துவிடுமோ என்ற பயமும் விண்ணப்ப விற்பனை மாணவர் சேர்க்கை விகிதம் என்ற மாயையும்தான் காரணம்.
எந்த சராசரி மாணவனுக்கும் தன்னால் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இணைந்த பொறியியல் நுழைவுத்தேர்வு (ஒஉஉ) மற்றும் பொதுத் தன்னார்வத் தேர்வு (இஅப) மற்றும் தனித்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு மாணவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் குவிவதற்கும் இந்த நம்பிக்கைதான் அடிப்படைக் காரணம். இந்த இயற்கையான விருப்பத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள். அரசுக்கு, இணைந்த பொறியியல் துறை நுழைவுத்தேர்வு மூலமும், பொதுத்தன்னார்வத் தேர்வு மூலமும் வருவாய் கிட்டி விடுகிறது. அது அவர்களுக்குள்ள ஏகோபித்த உரிமை. அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் மாணவர்களின் ஆர்வத்தைக் கொள்முதலாக்கி பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன்பாகவும் ஒஉஉ தேர்வுக்கு முன்பாகவும் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாளை அறிவித்துவிடுகின்றன. விளைவு? விண்ணப்ப விற்பனை விண்ணைத் தொடுகிறது. தவறான விகிதாச்சாரங்கள், தவறான விளக்கங்கள் தலைதூக்குகின்றன. யாராவது ஒஉஉ மற்றும் பிளஸ் 2 மார்க்கையும் சேர்த்து வடிவமைக்கும் மாதிரியை ஏற்பார்களா? விண்ணப்பப் படிவ விற்பனை எனும் தங்கச் சுரங்கத்தை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
அடுத்த காரணம், தரத்தின் உண்மைத் தன்மை. தரத்தின் உண்மையான சோதனை என்பது கல்வி நிலையங்களுக்கு எத்தனைப் பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்பது. அது மருத்துவமாக இருந்தாலும் சரி, பொறியியலாக இருந்தாலும் சரி. போட்டித் தேர்வு முடிவுகள் அல்லது பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் பரிசீலனை அமையும். 2013 - 14இல் ஹார்வர்டு தொழிலகப் பள்ளியில் சேர்வதற்கு 9315 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. சேர்க்கப்பட்ட மாணவர்கள் 932 பேர் மட்டுமே. விண்ணப்பம் மற்றும் மாணவ சேர்க்கைக்கான விகிதம் 10:1. சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 3000 இடங்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேலான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன என்று மிடுக்கான குரலில் பேசி வருகின்றன. அப்படியென்றால் அவர்கள் விகிதம் 33:1 என்பது பொருள். ஹார்வர்டை விட அவர்கள் உயர்ந்தவர்களா? நிச்சயமாக இல்லை. புத்திசாலியான விண்ணப்பதாரர் ஹார்வர்டுக்கு மனுச்செய்வதென்றால் அவருடைய பட்டதாரி மேலாண்மை சேர்க்கைத் தேர்வின் (எஙஅப) மதிப்பெண்கள் தெரிந்த பின்னர்தான் செயலில் இறங்குவார். ஏனென்றால் விண்ணப்பப் படிவம் ஒன்றின் விலை 250 டாலராயிற்றே. தன்னுடைய மதிப்பெண் ஹார்வர்டின் தரத்திற்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே அவர் முன்கூட்டியே விண்ணப்பிப்பார். பெற்றோர்கள் இந்த நிதர்சனமான உண்மையை நன்றாக உணர வேண்டும். அவசரமான முடிவுகளை எடுத்து அல்லல் படக் கூடாது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு ஏராளம் எனும் சிக்கலை (ல்ழ்ர்க்ஷப்ங்ம் ர்ச் ல்ப்ங்ய்ற்ஹ்) எதிர் கொண்டு வருகிறது. படிப்பவர்களைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகம். பெற்றோர்கள் சந்தைச் சக்திகளை முடக்க எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அவசரப் போக்கால் பணத்தை வாரி இறைத்து அந்த முறையை மேலும் மாசுபடுத்துகிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை சந்தைப் பொருளாக்கி மாணவர்களின் நேர்மையான ஆசைக்கு அணை போடுகிறார்கள். இந்தச் சமுதாயத்திற்கு அந்த இளைய பாரதத்தினர் நேர்மையான மற்றும் நியாயமான விளைவுகளைத் தர இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்திச் சரியாக நடந்து கொள்ள வேண்டும். பணத்தினால் எதனையும் சாதித்துவிடலாம் என்று நினைத்து அவசரக் கோலமாக தங்கள் பிள்ளைகளுக்கு தொழிற்கல்விக் கூடங்களில் சேர்க்கைக்கு கச்சை கட்டிக் கொண்டு முந்துவதைத் தவிர்க்க வேண்டும். நிதானம் காட்டினால் நிச்சயம் வெற்றிதான். பெற்றோர்களே, ஒய் திஸ் கொள்ள ஹரி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






