பாழாகும் பாரம்பரிய வணிகம்
மது நாட்டின் வணிகர்களின் நாடி நரம்புகளையெல்லாம் துண்டிக்கச் செய்யும் நாசகாரச் செயலுக்கு வழிகோலுவது தற்போது அறிமுகமாகி வருகிற இணையதள வணிகம் மற்றும் ஊக வணிகம் ஆகியவை.


மது நாட்டின் வணிகர்களின் நாடி நரம்புகளையெல்லாம் துண்டிக்கச் செய்யும் நாசகாரச் செயலுக்கு வழிகோலுவது தற்போது அறிமுகமாகி வருகிற இணையதள வணிகம் மற்றும் ஊக வணிகம் ஆகியவை.
எந்தப் பொருளானாலும் அது உற்பத்தி ஆகும் இடத்திலிருந்து கடைசி நுகர்வோரைச் சென்றடையும் வரை மூன்று அல்லது நான்கு மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களை (இடைத்தரகர் என்ற சொல் அபத்தமானது) கடந்து சென்று வணிகர்களுக்கான நியாயமான லாபமும் சேரும்போது கண்டிப்பாக உற்பத்தி விலையை விடக் கூடுதலாகத்தான் வரும்.
வணிகர்கள் தங்கள் வணிகத்தில் முதலீடு செய்து கொள்முதல், போக்குவரத்துச் செலவு, முதலியவற்றோடு தங்கள் உழைப்புக்கான ஊதியத்தையும் சேர்த்துத்தான் விற்பனை விலையைக் கணக்கிடுகிறார்.
ஒரு பொருளை உற்பத்தி விலைக்கே விற்பனை செய்கிறோம் என்று யாராவது கூறினால் அது ஏமாற்றும் செயல்.
இணையதளம் மூலம் வணிகம் செய்யும் ஒரு நிறுவனம் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தால், இதுபோன்று 20 நிறுவனங்கள் மூலம் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியபின் நூறு விழுக்காடு நமது நாட்டு வணிகம் இணையதள வணிகத்திற்கே சென்றுவிடும்.
அவ்வாறு நடந்தால் வணிகம் செய்யும் பல கோடி வணிகர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியதுதான்.
குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய துணி விற்பனையாகாவிட்டால் 40 சதவீதம் வரை தள்ளுபடியில் தள்ளி விடும் பெரிய நிறுவனங்களைப் பற்றிச் சிந்திப்போம்.
அவ்வாறென்றால் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் எத்தனை சதவீத (கொள்ளை) லாபத்தில் விற்கப்பட்டன என்பதை அறியலாம்.
பொதுவாக பலர் அறியாத ஒன்று, 100 கிலோ மூட்டை சர்க்கரை ஆலையில் ரூ.3,500க்குக் கொள்முதல் செய்யும் மொத்த வணிகர் தனது கடையில் வைத்து ரூ.3,600க்கு விற்பனை செய்கிறார்.
இதில் ஆலையிலிருந்து தனது கடைக்குக் கொண்டுவரும் செலவு ரூ.50 கழித்தால் அவர் பார்க்கும் லாபம் ரூ.50 மட்டுமே. இது எத்தனை சதவீதம்?
ரூ.3,600-க்கு கொள்முதல் செய்யும் சில்லரை வணிகர் அதை விற்கும் விலை என்ன தெரியுமா? ஒரு கிலோ ரூ36/50. இதில் அவர் தனது கடைக்கு எடுத்துச் செல்லும் செலவு ரூ.25 முதல் ரூ.50 வரை ஆகும்.
அப்படியானால் அவர் லாபமின்றி விற்கிறாரா? இல்லை. அந்தச் சர்க்கரை மூட்டை விற்ற பின் சாக்குப் பையை ரூ.55க்கு விற்கிறார். லாப சதவீதத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சில்லறை வணிகர்களெல்லாம் கணக்கு எழுதி வரி செலுத்தாமல் நுகர்வோரையும் வணிகவரித் துறையையும் ஏமாற்றுவதாக எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி.
மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த வணிகர் ஒரு பொருள் உற்பத்தி செய்பவரிடம் கொள்முதல் செய்யும்போது அதற்கான வரியைச் செலுத்தித்தான் வாங்கி வருகிறார்.
அவ்வாறு வரி செலுத்திய பொருளை அவர் சில்லறை வணிகருக்கு விற்கும்போது பில் போட்டு விற்றால்தான் அவர் கட்டிய வரியை தன்னிடம் வாங்கும் சில்லறை வணிகரிடம் வசூல் செய்ய முடியும்.
ஊக வணிகத்திற்கு வருவோம். கடந்த ஆட்சி காலத்தில் விலைவாசி, குறிப்பாக, தங்கம் மற்றும் உணவு தானியங்களின் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்ததன் காரணமே ஊக வணிகம்தான்.
வெறும் சூதாட்டமாகவே குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் இன்ன பொருளை இந்த அளவு இன்ன விலைக்கு விற்பனை செய்கிறேன் என்று இணையதளம் மூலம் அறிவிப்பதும் அதைப் பார்க்கும் மற்றொருவர் அவர் கூறிய விலைக்கு அவர் கூறிய அளவு அந்தப் பொருளை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் மேற்கொள்வதுமாக நடைபெறும் வணிகமே ஊக வணிகம் ஆகும்.
இதில் நேரடி சரக்கு பரிமாற்றம் கிடையாது. குறிப்பிட்ட தேதியில் நிலவும் விலை நிலவரத்திற்கேற்ப லாபத்தையோ, நஷ்டத்தையோ கருத்தில்கொண்டு பணப்பரிமாற்றம் நடைபெறும். இதில் சேவைவரி தவிர விற்பனைவரி செலுத்துவது கிடையாது. உண்மையில் இது வணிகமே அல்ல.
கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு நுகர்பொருள்களின் விலைவாசி ஏறியதற்கு இதுவே முக்கிய காரணம். இது தடை செய்யப்பட வேண்டுமென்பதே உண்மையாக வணிகர்களின் கோரிக்கையாகும்.
பொருள்களின் விலைவாசி ஏற்றம், இறக்கம் என்பது அவற்றின் விளைச்சல் அல்லது தயாரிப்பு மற்றும் தேவையைச் சார்ந்ததே.
முடிபடிய சீப்பும், அடிகாக்கும் பாதணியும் கடைவிரித்துக் காத்திருப்பவர் வணிகரே. உயிர் காக்கும் மருந்தும் அறிவூட்டும் நூலும் உமது கையருகே தருபவர் வணிகரே. தேரும் திருவிழாவும் சிறக்கச் செய்பவரும் வணிகரே. மறவாதீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...