கயிறு மேல் நடைபோடும் ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கடன் கொள்கை காட்டமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குத் தரும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும்.










