மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?
இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்).










