ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

56 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற ஐ.டி. நிறுவனங்கள் திட்டம்: கலக்கத்தில் பொறியாளர்கள்

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறைக்கு தற்போது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

News image
Updated On :13 மே 2017, 7:44 am

DIN


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறைக்கு தற்போது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் செயல்பட்டு வரும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும், இந்த ஆண்டு சுமார் 56 ஆயிரம் பொறியாளர்களை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விப்ரோ, இன்போசிஸ், டெக் மகிந்திரா, காக்னிஸென்ட் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் பணியாளர் குறைப்பில் ஈடுபடப் போகின்றன. ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு ஊழியர்களை வெளியேற்றப் போகிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

அதே சமயம், இந்த தகவல்களை வெறும் யூகங்கள்தான் என்று விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மறுத்துள்ளன.

ஆனால், இந்த விளக்கத்தை பொய்யாக்கும் வகையில் விப்ரோ நிறுவனம் கடந்த மாதம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. இந்த எண்ணிக்கை 2000-ஐ தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனம் விப்ரோ. இந்நிறுவனத்தின் கீழ் 1.96 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பற்றி அந்நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விசா நடைமுறைகள் சமீபகாலமாக கடுமையாக்கப்பட்டு வருவதால் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அதே போல, கடந்த வாரம் காக்னிஸென்ட் டெக்னாலஜி சொல்யூஷன் நிறுவனம், பல முக்கிய வேலைகளை தானியங்கி அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றும் வகையில், தங்களது மூத்த செயல்பொறியாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களுக்கு "தாமாக முன்வந்து வேலையில் இருந்து பிரிதல்" (Voluntary Separation Package) வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இதன் கீழ், 9 மாத ஊதியத்துடன் வேலையில் இருந்து அவர்கள் தாங்களாக விலகிக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற காக்னிஸென்ட் திட்டமிட்டுள்ளது. இதோடு, மேலும் 6 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள், தங்கள் வெளியேற்றத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான பிரச்னையில் உடனடியாகத் தலையிடக் கோரி சென்னையில் உள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள காக்னிஸென்ட், நாங்கள் எந்த பணி நீக்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இது பணித்திறன் சார்ந்தது. பணித் திறனுக்கும், பணித் தேவைக்கும் வேறுபாடு ஏற்படும் போது, திறன் குறைந்த ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றப்படுவார்கள். அதுதான் இந்த ஆண்டும் நடைபெறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

விப்ரோ, காக்னிஸெண்டைத் தொடர்ந்து இன்போசிஸும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. அந்நிறுவனத்தின் 6வது பிரிவில் இருக்கும் திட்டப் பணி மேலாளர்கள், திட்ட மேலாளர்கள், மூத்த ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் உயர் மட்ட ஊழியர்கள் சுமார் 1000 பேர் பணியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த, அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கரை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவும், அந்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் H1B1 விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை உருவாக்கியதும் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இவர்களைத் தொடர்ந்து டெக் மகிந்திரா நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் இருந்து சுமார் 1,500 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

பல நாடுகளில் இயங்கும் நிறுவனங்களின் பேக் ஆபிஸ் பணிகளை செய்து வந்த இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இது பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுகளே இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைகளுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.