கிராம சபை-1 வரலாறும் அதிகாரங்களும்
(Grama Saba-1 History and Powers)
இன்றைய காலகட்டத்தில் அதிகாரப்பகிவில் முக்கிய பங்கு வகிக்கும், கிராம சபைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அதன்படி கிராம சபைகளைப் பற்றிய வரலாறு, அமைப்பு அதிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.
பண்டைய தமிழரின் கிராம சபை...
மாறன் சடையன் என்பவன் வெளியிட்ட கல்வெட்டு ஒன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மண்ணூர் என்னுமிடத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு உள்ளாட்சியை நடத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த மகாசபை பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. கிராமத்தை நிர்வாகம் செய்வதற்கென கிராமசபை அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமசபை உறுப்பினர்கள் வாரியங்களாகப் (குழு) பிரிந்து செயல்பட்டனர். வாரிய உறுப்பினர்களது தகுதிகள் பற்றிய விளக்கத்தை இக்கல்வெட்டால் அறியலாம். வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்துடையவர்களும், வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்களும், நன்னடத்தை உடையவர்களும் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சபை, மக்கள் சபை என அழைக்கப்பட்டது. சபைக் கூட்டம் பற்றிய செய்தியினை முரசு கொட்டி அறிவித்தனர். கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தின் அடியில் அல்லது ஒரு பொது இடத்தில் மக்கள் சபை நடைபெற்றது.
சோழர் காலத்தில் கிராம ஆட்சி, கிராம சபையில் மேற்கொள்ளப்பட்டது. கிராம சபை உரிமையோடு பல செயல்களைச் செய்தது. கோயில்களைப் பாதுகாத்தது. அறநிலையங்களைப் பேணியது; மக்களுக்குக் கடன் உதவி செய்தது. விஜயநகர ஆட்சியில் கிராம ஆட்சி இந்நிலையில் இல்லை. பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராம சபைகள் மறைந்தன.
உத்திரமேரூரில் ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்துள்ளது. இச்சபை உழவு, கல்வி, மராமத்துவேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்து வந்தது. சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது. குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது போன்ற சிறப்புமிக்க ஊராட்சிமுறையைப் பற்றி 2 கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
சோழர் காலம், பல்லவர்களின் பின்னான களப்பிரர் ஆட்சி, நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆதிக்கம் என அதிகாரங்கள் மாறிமாறிச் சுழற்றியடித்த போது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகப் பகுதிகளில் படிப்படியாக வலுக்குறைந்து சற்றேறக்குறைய காணாமலே போகத் தொடங்கிய கிராம சபைகளை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மீண்டும் வலிமை ஆக்கினார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை.
கிராம சபை இன்றைய சட்ட நிலைகள்...
அரசியலமைப்பு 73 - வது திருத்தச் சட்டம், 1992 மூலம் பகுதி -9- இல் சரத்து 243 முதல் 243(O) வரையில் பஞ்சாயத்து சட்டங்களைப்பற்றிச் சொல்கிறது
அரசியலமைப்புச் சட்டம் சரத்து 243. கிராமசபை மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தால் வழக்கப்பட்ட அத்தகைய அதிகாரங்களை கிராம சபை செலுத்தலாம்.
அரசியலமைப்புச் சட்டம் 11-வது அட்டவணையில் கிராம சபையின் கீழ் உள்ள இனங்கள்:
1. வேளாண்மை பரவாக்கம் உள்ளிட்ட வேளாண்மை
2. நிலமேம்பாடு, நிலசீர்திருத்த நிறைவேற்றம், நில ஒருங்கிணைப்பு மற்றும் மண் பாதுகாப்பு
3. சிறிய நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை ஆற்றுப் பள்ளத்தாக்கு வளர்ச்சி.
4. கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மற்றும் பறவைகள் வளர்பி
5. மீன் வளம்
6. சமூகக் காடு மற்றும் வளர்ப்புக் காடு
7. சிறுகாடு விளைபொருள்
’8. உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் உள்ளிட்ட சிறு தொழில்கள்
9. காதி, கிராம மற்றும் குடிசைத் தொழில்கள்
10. ஊரக வீட்டு வசதி
11. குடிநீர்
12. எண்ணெய் மற்றும் தீவனம்
13. சாலைகள், மதகுகள், பாலங்கள், படகுத் துறைகள், நீர்வழிகள், மற்றிய போக்குவரத்துகள்
14. மின் விநியோகம் உள்ளிட்ட ஊரக மின்சாரம்
15. மரபுசாரா மின்சக்தி மூலங்கள்
16. வறுமை ஒழிப்புத் திட்டம்
17. தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைப்பள்ளிகள் உள்ளிட்ட கல்வி
18. தொழில்நுட்பக் பயிற்சி மற்றும் வாழ்க்கைக் கல்வி
19. முதியோர் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி
20. நூலகங்கள்
21. பண்பாட்டுச் செயற்பாடுகள்
22.தொடக்க நல்வாழ்வு மையங்கள் மறும் மருந்தகங்கள்
24. குடும்ப நலம்
25. மகளிர் மற்றும் குழந்தை. வளர்ச்சி
26. உடல் ஊனமுடையோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரின் நலம் உள்ளிட்ட சமூக நலம்
27. பலவீனப் பிரிவினர்களின் நலம் அதிலும் குறிப்பாக பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலம்
28. பொது விநியோக முறை
29. சமூக சொத்துகள் பராமரிப்பு
பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலர் திரு. A.N.P. சின்கா, தன் கடித எண். M - 11011/66/2008-P&C/P&J, 27th ஏப்ரல், 2009 குறிப்பிட்டுள்ள கிராம சபை அதிகாரங்கள்
பிரிவு 328. கிராம சபைகளின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.
ஐந்தாவது அட்டவணையில் உள்ள அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளுடன், திட்டமிடப்பட்ட பகுதிகளிலுள்ள கிராம சபைக்கு பின்வரும் அதிகாரங்களும் செயல்பாடும் இருக்க வேண்டும்.
அதாவது;
a) மக்களுடைய மரபுகள், பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார அடையாளங்கள், சமூக வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மரபு வழி தீர்வு காணல்
b) கிராமப்புறத்தின் பரப்பளவிலுள்ள நிலப்பகுதி, நீர் மற்றும் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அதன் மரபுவழி, மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு இணங்க நிர்வகிக்கவும் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் ஆற்றலுடன் செயல்படும் காலத்திற்கு ஏற்றவாறு நிர்வகிக்கவும்.
c) எந்த மதுவையும் விற்பது அல்லது நுகர்வு தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த,
d) திட்டமிடப்பட்ட பகுதிகளில் நிலத்தை, ஒரு பட்டியல் பழங்குடியினரின் அந்நியப்படுத்தாமல் தடுக்க மற்றும் சட்டவிரோதமாக அந்நியப்பட்ட நிலத்தை மீட்டெடுக்க;
e) பட்டியல் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கும்;
f) மாநில அரசு எந்த நேரத்திலும் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அல்லது ஒப்படைக்கக்கூடும் பிற அதிகாரங்களும் செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தி செயல்பட வேண்டும்.
- தொடரும்…
என் பையன் கிட்ட இதையெல்லாம் நான் பேசக் கூடாதா? யார் சொன்னது?
குண்டான பெண்களென்றால் பழகப் பிடிக்கும், ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் யோசிப்பீர்களா?!
சில்க் ஸ்மிதா, குஷ்பூ இப்போது சந்திரபாபு நாயுடு அடுத்து யாருக்கெல்லாம் கோயில் கட்டப் போகிறோம்?!
இந்த ‘தாடி சுந்தர ரூபிணி’ தோற்றத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கொரு உதாரண புருஷி!