ருவாண்டாவில் புகழ்பெற்ற ‘இமிகாங்கோ’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ விபரங்கள்!

ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க  தற்போது வைரலாகி  வருகிறது.
ருவாண்டாவில் புகழ்பெற்ற ‘இமிகாங்கோ’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ விபரங்கள்!
Published on
Updated on
2 min read

ருவாண்டா நாட்டில் மாட்டு சாணம் மூலம் செய்யப்படும் கலை பொருட்கள் உலகம் முழுக்க  தற்போது வைரலாகி  வருகிறது.  'இமிகாங்கோ ஓவியம்' என்று அழைக்கப்படும்  இந்த மாட்டு சாண ஓவியத்தை வாங்க உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ருவாண்டா நாட்டு பெண்களின் குடிசைத் தொழிலாக கருதப்படும்  இந்த ஓவியத்தைப் பற்றி ஒரு பார்வை...

ஆப்பிரிக்காவின் குறைவான மக்கள் தொகை கொண்ட மிகச் சிறிய நாடு ருவாண்டா.  ருவாண்டா நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பேர் பெண்கள் ஆவார். உலகிலேயே நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு அதிகளவில் உள்ள நாடும் ருவாண்டாவாகும். அது போன்று இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதில்  அதிக ஆர்வம் கொண்ட  நாடு ருவாண்டா. 

மாட்டுச்சாணம் மூலம் உருவாக்கப்படும் இந்த இமிகாங்கோ ஓவியம், ருவாண்டாவின் மிகவும் தனித்துவமான கலை வடிவமாகும். இது தான்சானியா எல்லைக்கு அருகே உள்ள நயாகாரம்பி என்ற பகுதியின் ருவாண்டாவின் கூட்டுறவு ஒன்றால் உருவாக்கப்பட்டது.   சாணத்தை சிமெண்ட் போன்று மாற்றி அதை வைத்து சுவற்றில் மாட்டும் வகையில் அழகான கலை பொருட்களை ருவாண்டா நாட்டு பெண்கள் உருவாக்குகிறார்கள். 

வாழை இலை,  சாறெடுத்த கற்றாழையை காயவைத்து  சருகுகளாக்கி, பின், அதனை எரித்து மாட்டு சாணத்துடன் கலந்து பிசைந்து ஓவியங்களை உருவாக்குகிறார்கள். பின்னர், அதில் கற்றாழைச் சாறு மற்றும் ஒருவித தாவரத்தின் பழம், வண்ணங்களை உபயோகப்படுத்தி வண்ணம் தீட்டுகிறார்கள். பெரும்பாலும் போர் சின்னங்களை அவர்கள் இந்த கலையில் வெளிப்படுத்துகிறார்கள். 

இந்த ஓவியக் கலை கிப்கோங்கோ மாகாணத்தில் 18ம் நூற்றாண்டில் உருவானது. அந்நாட்டின் அரசன் கிகாம்பியின் மகள் காகிறா இதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போதிலிருந்து மக்கள் இதை செய்து வருகிறார்கள். 

கடந்த காலங்களில், இந்த ஓவியங்களை மக்கள் வீட்டின்  தடுப்பு  சுவர்களில் சுவர் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். 1994- ஆம் ஆண்டு  நடந்த போரில் ருவாண்டா மக்கள்  எல்லாவற்றையும் இழந்தார்கள். அப்போது அவர்கள் இந்த கலையையும் இழந்து இருக்கிறார்கள்.  பின்னர்,  2000 -இல் இந்த கலை மீண்டும் உயிர் பெற்றது. 

அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த இந்த ஓவியங்களை அவர்கள் விலைக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.  அதுமுதல்  இந்த ஓவியங்கள் பெண்களின் குடிசைத் தொழிலாக மாறியுள்ளது.  தற்போது பெரிய அளவில் வியாபாரமாக மாறி பெண்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருகிறது. தற்போது  மரச் சட்டங்களில் வரைந்து வால் ஹாங்கிகாகவும், சுவர் ஓவியங்களாகவும் வைக்கப்படுகின்றன.  

சமீபத்தில்  ருவாண்டா நாட்டிற்கு சுற்றுலா சென்ற  பிரதமர் மோடி,  வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு, 200 பசு மாடுகளை ருவாண்டா நாட்டிற்கு பரிசளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகின் 5 நட்சத்திர ஹோட்டல்களில்  இந்த ஓவியங்களை வைக்க விரும்பி வாங்கி செல்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.