தங்களது வேலைக்காக பணியாளர்களை வேறு எங்கும் செல்லவிடாமல் தக்கவைத்துக் கொள்வதற்காக சுமங்கலி திட்டத்தை நிறுவனங்கள்/உரிமையாளர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு பங்கை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். வேலை வாய்ப்பை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இதில் நிச்சயமாக பறிக்கப்படுகிறது.
4. சுமங்கலி திட்டம் மற்றும் மனித வணிகம்:
செயல்பாடு வழிமுறை நோக்கம் ஸ்ரீ மனித வணிகம் பணிக்கு ஆட்சேர்ப்பு, போக்குவரத்து, இடம் மாற்றுகை, மறைவாக தங்க வைத்தல், நபர்களை வரவைத்தல், பலவந்த பிரயோகம் அல்லது அச்சுறுத்தல், நிர்ப்பந்தம், கடத்தல், மோசடி, ஏமாற்றல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலை, பணத்தொகை அல்லது ஆதாயங்களை வழங்குதல், பிறரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உட்பட தவறாக பயன்படுத்துவது, பாலியல் சுரண்டல், கட்டாயப்பணி, அடிமைத்தனம் அல்லது அதை போன்ற நடைமுறைகள், உடலுறுப்புகள் அகற்றல் சுரண்டலின் பிற வகைகள்.