குடியரசு தினத்தன்று டிவிட்டர் நிறுவனம் 'இந்தியா கேட்' வடிவில் ஒரு புதிய ஈமோஜியை அறிமுகப்படுத்தி உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த ஈமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இந்த ஈமோஜி ஜனவரி 29-ம் தேதி வரை நீடிக்கும்.

'இந்தியா கேட்'டின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஈமோஜி ஒன்பது மொழிகளில் தட்டச்சு செய்யும் போது கிடைக்கிறது.
இது குறித்து டிவிட்டர் இந்தியாவின் அரசுத் தொடர்பு பொது கொள்கை தலைவர் மஹிமா கவுல் கூறுகையில், 'இந்தியா கேட் எனும் பிரத்யேகமான இந்த ஈமோஜியைக் கொண்டு டிவிட்டர் இந்தியா, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் குடியரசு தினம் பற்றிய உரையாடல்களை சமூக வளைத்தளங்களில் பகிரப்படும் போது இந்த ஈமோஜியை இணைகையில் அது தேசிய ஒற்றுமையை நினைவூட்டும் ஒரு சின்னமாகத் திகழும்’ என்றும் கூறினார்.

ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு துவங்குவதற்கு முன்னதாக, பிரதம மந்திரி இந்தியாவின் நுழைவாயிலுக்கு வருகை தந்து ஒவ்வொரு வருடமும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் குறியீடாக 'இந்தியா கேட்' ஈமோஜி வடிவமைப்பு உள்ளது.

குடியரசு சிறப்பு கொண்டாட்டங்களையும் வாழ்த்துக்களை பதிவு செய்யும் விதமாக நீங்கள் டிவிட்டர் பதிவுகளை உருவாக்கும் போது புதிய ஈமோஜியைப் பயன்படுத்துங்கள். இதற்கு நீங்கள் #RepublicDay, #HappyRepublicDay மற்றும் # RepublicDay2018 ஆகிய ஹாஷ் டேக்குகளைப் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


