தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இது புதுசு! இருசக்கர வாகன சாகசத்தை செய்யப் போகும் பெண்கள்!!

இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகன சாகசத்தை இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பெண்களும் நிகழ்த்தி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை

News image
Updated On :25 ஜனவரி 2018, 9:03 am

சாலையில் பெண்கள் எவ்வளவு திறமையாக வாகனம் ஓட்டினாலும் ஒண்ணு ‘பார்த்து பொறுமையா ஓட்டுமா (30கிமீ வேகத்தில் சென்றாலே)!’ அப்படினு ஒரு அறிவுரை குரல் கேட்கும், இல்லை ‘பொண்ணுங்களுக்கெல்லாம் லைசனஸ் கொடுத்து நம்ப உசுர வாங்குறாங்க! கொஞ்சம் வேகமா தான் போயேன்’ அப்படினு மிரட்டும் தொனியில் ஒரு குரல் கேட்கும். பெண்களுக்குப் பாதுகாப்பாக வண்டியோட்டத் தெரியாது என்பது எழுதப்படாத ஒரு நியதியாகவே உள்ளது. இதைப் பொய்யாக்க போகிறது இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி.

இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் மட்டும் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகன சாகசத்தை இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாகப் பெண்களும் நிகழ்த்தி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைக்கப் போகிறார்கள். நாம் கொண்டாட போவது நாட்டின் 69-வது குடியரசு தினம். ஒவ்வொரு ஆண்டும் இதை சிறப்பிக்கும் வகையில் தில்லியில் முப்படை பாதுகாப்பு வீரர்கள் அணிவகுத்து வீர, தீரச் சாகசங்களை நிகழ்த்தி அனைவரையும் வியப்பிலும், பெருமையிலும் ஆழ்த்துவார்கள்.

Border Security Force (BSF) எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் இந்த ஆண்டு 113 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 26 ராயல் என்ஃபீல்டு 350சிசி வண்டியில் டேர்டெவில் ஸ்டண்ட் எனப்படும் ஓடும் வாகனத்தில் மனித பிரமிடு போன்ற சாகசங்களை இவர்கள் நிகழ்த்தப் போகிறார்கள். இவர்கள் அனைவரும் 26 முதல் 31 வயதிற்குட்பட்ட பெண்கள். இந்தப் பெண்கள் அணிக்கு சீம பவானி என பெயரிடப் பட்டிருக்கிறது.

இந்த 113 பெண்களையும் தலைமை தாங்கி முன் நடத்தப் போவது ஸ்டான்ஜின் நோரிக்(28) என்னும் துணை ஆய்வாளர். ஜம்மு காஷ்மீர் லதாக் பகுதியைச் சேர்ந்த இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் ‘பெண்கள் டேர்டெவில்’ அணியை வழிநடத்த இவரைத் தேர்ந்தெடுத்த போது இவருக்கு இருசக்கர வாகனம் ஓட்டக் கூட தெரியாதாம், ஆனால் இன்று அதிக கணமுள்ள புல்லட் வண்டியில் 10 பேரை வைத்து சாகசம் நிகழ்த்தும் அளவிற்கு வாகனம் ஓட்டும் உத்தியைக் கற்று தேர்ந்துள்ளார்.

Story image

இவரைப் போலவே இந்த அணியில் இருக்கும் பெண்கள் பலரும் பைக் ஸ்டண்ட் செய்ய முன்வந்த போது இருசக்கர வாகனத்தை ஓட்டத் தெரியாது, பின்னர் விடா முயற்சியுடன் அதைக் கற்று தேர்ந்துள்ளனர். ஆண்களுக்குப் பதிலாக பெண்களை இந்த ஆண்டு இருசக்கர வாகன சாகசத்தை நிகழ்த்தச் சொல்லலாம் என முடிவெடுத்தது இந்திய எல்லை பாதுகாப்பு படையின் டிரக்டர் ஜென்ரல் கே.கே.சர்மா ஆவார்.

113 பெண்களைக் கொண்ட இந்த அணியில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதே வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம். எந்தெந்த மாநிலத்தில் இருந்து எத்தனைப் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்றால்,

பஞ்சாப் - 20
மேற்கு வங்காளம் - 15
மத்திய பிரதேசம் - 10
மகாராஷ்டிரா - 09
உத்தரப் பிரதேசம் - 08
அசாம், பிஹார் - 07
ஒடிசா - 06

ராஜஸ்தான், மணிப்பூர், குஜராத் - 05
ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் - 03
கர்நாடகா, உத்தர்கண்ட், தில்லி, கேரளா - 02
மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம் - 01

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.