பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க பாஸ்!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

News image
Updated On :26 ஜனவரி 2019, 3:48 pm IST

முக நூலிலிருந்து....

உன்னுடைய ஈகோ, பொறாமை எண்ணங்கள் உன்னை எரிப்பதற்குள் நீ அதை எரித்து விடு.

- நிர்மலா பிரேம்.

தரகர்: இந்த டிக் டாக் வந்ததுக்கு அப்புறம் எங்க கஷ்டம் பாதியாக குறைஞ்சிடுச்சு!
ஒருவர்: எதை வச்சு அப்படி சொல்றீங்க?
தரகர்: முன்னாடி எல்லாம் நாங்க பொண்ணு போட்டோவைக் காட்டி புடிச்சிருக்கான்னு கேப்போம், இப்பல்லாம், அவங்க பொண்ணையே காட்டி முடிச்சுக் கொடுங்கன்னு கேக்கறாங்க!.
ஒருவர்: ----------!!!

- சையத்

மானேஜர்: என்னம்மா! நைட்டி போட்டுக்கிட்டு ஆபீசுக்கு வர்றே?
செகரட்டரி : நீங்கதானே சார் 
ஆபிûஸ வீடு மாதிரி நினைச்சுக்க சொன்னீங்க?

**

அவர்: எங்க தலைவருக்கு கட்சியும், கண்ணும் ஒண்ணுதான்
இவர்: நிஜமாவா?
அவர்: ஆமாம் அவருக்கு 
ரெண்டுலேயுமே பவர் இல்லை.

**

டாக்டர் : இன்னிக்கு எனக்கு நாலு ஆபரேஷன் இருக்கு
நோயாளி : நான் ஒரு பேஷண்ட்தானே இருக்கேன் டாக்டர்.
டாக்டர்: உங்களுக்குத்தான் நாலு ஆபரேஷனும்

**

அவர்: கச்சேரி சீசனும் அதுவுமாஅந்த பாகவதர் ரொம்ப பாவம்.
இவர்: ஏன்?
அவர்: டாக்டர் அவரை வாயை கட்ட சொன்னாராம்.

- வி.பார்த்தசாரதி

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப ரொம்ப மார்டன்''
"அப்படியா?''
"ஆமாம் ... மணப்பெண்ணுக்கு"குக்' பண்ணத் தெரியுமான்னு கேட்க மாட்டாங்க... ஸ்விகியில் "புக்' பண்ணத் தெரியுமான்னுதான் கேட்பாங்க.

**

"தலைவர் மட்டும் ஏன் இப்படி உளர்றார்''
"தப்பாச் சொல்லாதீங்க''
"என்ன தப்பு?''
"உளர்றது தலைவரோட குல வழக்கமாம்''

- சாய், சாலிகிராமம்.

அவருகிட்டே எந்த பொருள் வாங்கினாலும் உல்டாவாதான் வேலை செய்யும்''.
"என்ன வாங்கினீங்க?''
"ஊதுபத்தி வாங்கினேன், கொளுத்துனா கொசு சாகுது''.

- அ.செல்வகுமார், திருவொற்றியூர். 

கடைக்காரர்: உங்க வீட்டுக்காரர் கண்டக்டரா?
பெண்: எப்படி கண்டுபிடிச்சீங்க?
கடைக்காரர்: ஜவுளிக்கடைக்கு வரும்போது கூட ரூபாய் நோட்டை விரல் இடுக்கில் வைத்திருக்கிறாரரே!

- கு.இரத்தினம், தேனி.

**

'ஏம்ப்பா..! 60001 ரூவா கடன் வாங்கிட்டு 10006 ரூவாயைக் கொடுக்கறியே... 
ஞாயமா இது?''
'திருப்பிக் கொடுக்கறதுங்கிறது இதுதான், தெரியாதா உனக்கு..!''

- ராமச்சந்திரன்

**

Story image

சாமை சோறு ஆமை ஆயுள்!
குதிரை வாலி தந்திடுமே
குறைவில்லா வாழ்வு.
கம்பங் கூழால் கால் ஊன்றி நடப்பார்!
திணை உண்டால்
தேக்கு போல் உடல் வலுவாகும்!
வரும் நோய்களை
வரகால் விரட்டுவோம்!
ராகியில் பலகாரம்
கால்சியத்தின் அதிகாரம்!
சிறு தானியத்தை உண்போம்
வளமாய் வாழ்வோம்.

- நாட்டு மருந்து சித்த மருத்துவம்

சுட்டுரையிலிருந்து...

வண்டின் மீது உள்ள காதலை பூக்கள்,
வாசனையில் சொல்கிறது!
குழந்தை மீதுள்ள காதலை தாய்,
அரவணைப்பில் சொல்கிறாள்!
அடியே! உன் மீது உள்ள காதலை நான்
எப்படி சொல்வது?

Story image

- தமிழ்க் கவிதைகள்

கொட்டும் மழையில் 
நனைய கொடுத்து 
வைத்த குடைகளுக்கு
அவள் விரல்கள் பட்டும்
இணைய கொடுப்பினை இல்லை.. 
இடை வெளியில்!

- காளையன்!

வலைதளத்திலிருந்து...

ஒரு குட்டி கதை...

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது...

கோபத்தில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.... 

வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல் திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார்.

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருக்கிறது என்று.. அந்த வாசகம்

" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ. 

panithuli-shankar.blogspot.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.