i) வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையே வாடகை ஒப்பந்தம் குறித்து உடன்பாடு ஏற்படாத நிலையில்
ii) வாடகைதாரர் இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், அது குறித்து வீட்டு உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதத்திற்கு பின்னரும் கூட வாடகை கொடுக்காத நிலையில்
iii) வீட்டு உரிமையாளரின் எழுத்துபூர்வமான சம்மதம் இன்றி, வீட்டின் ஒரு பகுதியையோ அல்லது முழு வீட்டையோ பிறருக்கு கொடுக்கும் நிலையில்
iv) வாடகைதாரர் பிறருக்கு தொந்தரவு கொடுப்பது, கூடுதல் இடத்தை ஆக்கிரமிப்பது, வீட்டிற்கு சேதம் விளைவிப்பது, சட்டத்திற்கு புறம்பான வகையில் பயன்படுத்துவது போன்ற காரணங்களுக்காக வீட்டின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் கூட அவ்வாறே தொடரும் நிலையில்
v) வீட்டில் ரிப்பேர் செய்வது, வீட்டில் மாற்றங்கள் செய்வது போன்றவற்றிற்காக வீடு தேவைப்படும் நிலையில், அதாவது வீட்டை காலி செய்யாமல் அத்தகைய வேலைகளை செய்ய முடியாது என்ற நிலையில்
vi) வீட்டின் உரிமையாளருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ தங்களின் சொந்த உபயோகத்திற்காக வீடு தேவைப்படும் நிலையில்
vii) வாடகைதாரர் வீட்டை காலி செய்வதாக எழுத்துபூர்வமான நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் வீட்டை விற்பது போன்ற நடவடிக்கைகளை வீட்டு உரிமையாளர் எடுத்த பின், வாடகைதாரர் வீட்டை காலி செய்யாமல் இருக்கும் நிலையில்