கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்!

தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.  

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூன் 2022, 9:20 am

சன்ஷி சம்ரு

தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் கருணாநிதியும் திமுகவும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். 

* 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்தவர்கள்,  காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் திமுகவினர்.

* அண்ணா வழியில் கருணாநிதியும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர்.  தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் அவர் ஆணை பிறப்பித்தார்.

* 1996-ஆம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

* அனைத்துப் பள்ளிகளிலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டத்தையும் நிறைவேற்றினார்.

* 2010-11-ஆம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, ஹிந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது.  தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கருணாநிதியே காரணம்.

YouTube video thumbnail

* தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இதை நிறைவேற்றியவர் கருணாநிதி.

* திருக்குறளை மீட்டு, திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு.

* கருணாநிதி கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா மறைந்தபோது, “"பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்'-- அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

* தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார்.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிட்டவர் கருணாநிதி.

* அண்ணா வழியில், கருணாநிதியும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

* தமிழைச் செம்மொழியாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவிப்பு.  இதற்கு முழு முயற்சி எடுத்தவர் கருணாநிதி.

* தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியவர்.

* 1974-ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை நிறுவினார்.

* சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியை நிறுவி,  வெளிநாடுகளிலும் கல்வி மையங்களை ஏற்படுத்தினார்.

(ஜூன் 3-மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.