இன்னும் சில நாள்களில் விடைபெற போகும் 2024 இல் அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமத்தின் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிந்த விவகாரம், கட்டுக்குள் கொண்டுவர மனமில்லாத மணிப்பூர் கலவரம், சம்பல் நகர வன்முறை, அமெரிக்க பணக்காரர் சோரஸ் விவகாரம், வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தது. பின்னர், அதை மாநிலங்களவைத் துணைத் தலைவர் நிராகரித்தது, அடுத்த கூட்டத் தொடரிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளது, சர்ச்சைக்குரிய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகும் நிறைவேற்ற செய்தது.