தேசிய சுகாதார ஆணையத்தின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டம், முதலில், சண்டீகர், லடாக், புதுச்சேரி, அந்தமான்- நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி - டையு டாமன் ஆகிய ஆறு யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் சுகாதார எண்ம அடையாள அட்டையில், அந்த நபரின் நோய்கள், மேற்கொண்ட பரிசோதனைகள், எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைகள், உட்கொண்ட - உட்கொள்ளும் மருந்துகள் உள்ளிட்ட உடல்நிலை குறித்த அனைத்து விவரங்களும் சேமித்து வைக்கப்படும்.