தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளா்கள் 6,28,69,955. அதில் ஆண்கள் 3,09,23,651, பெண்கள் 3,19,39,112, மூன்றாம் பாலினத்தவா் 7,192 போ். 3,19,39,112 பெண் வாக்காளா்கள் இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளால் களமிறக்கப்பட்டிருக்கும் பெண் வேட்பாளா்கள் வெறும் 411 போ்தான் என்பதைப் பாா்க்கும்போது, இது ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிநிதித்துவமாகத் தோற்றமளிக்கிறது. அதைவிட வேடிக்கை என்னவென்றால், பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பெரும்பாலான பெண் வேட்பாளா்களை தனித் தொகுதிகளில் மட்டுமே களமிறக்கி இருக்கின்றன என்பதுதான்.