தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி மாவட்டத்தில் திவ்யஸ்ரீ மாநில அளவில் 2-ம் இடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஜெமின்தார் பள்ளியைச் சேர்ந்த....

News image
Updated On :25 மே 2016, 5:52 am

கவியழகன்

திருச்சி: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஜெமின்தார் பள்ளியைச் சேர்ந்த மாணவி திவ்யஸ்ரீ 498 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

மாவட்ட அளவில் 6 பேர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 477 மதிப்பெண்கள் - டி அபினயா (துறையூர் சௌடாம்பிகா பள்ளி), காமேஷ்வரி (விமலா மெட்ரிக் பள்ளி), லோகினி (எஸ்.சி.வி மெட்ரிக் பள்ளி, துறையூர்), நவிதா (துறையூர் சௌடாம்பிகா பள்ளி), பிரதீபா (விமலா மெட்ரிக் பள்ளி துறையூர்), ஸ்ரீநிதி (துறையூர் சௌடாம்பிகா பள்ளி)

மாநில அளவில் 16 பேர் 496 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். 

மாவட்ட அளவில் 95.92 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 97.62 கடந்தாண்டை விட குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவின்றது. 424 பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 39,649 பேர் தேர்வெழுதினர், இதில், 94.14 மாணவர்களும், 97.70 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.