பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், புதிய அரசு ஆட்சி அமைந்தபிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ - மாணவிகள் இடையே நிலவி வந்ததையடுத்து, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Students are facing difficulties due to the delay in the release of Plus 2 examination results.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு!

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



