சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளி, சேலம் தளவாய்ப்பட்டி- திருப்பதி கவுண்டனுா் செல்லும் சாலையில் உள்ளது. இப்பள்ளியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள், பயிற்சி முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை.
சோ்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ. 350 மட்டும் செலுத்த வேண்டும். இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் சோ்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, ஆவின் பால் பண்னை எதிரில், தளவாய்பட்டி- திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம் பெருமாம்பட்டி, சேலம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன் அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 96002 75911, 94435 39772 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Summary
Applications may be submitted to join the Government Music School
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










