கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

1 மதிப்பெண்ணும் கூடவில்லை! சமூக வலைத்தளங்களில் வைரலான விடைத்தாள்!

விடைத்தாள் மாற்றம், பல விடைகள் திருத்தப்படாமல் இருந்தது என சமூக வலைத்தளங்களில் வைரலான விடைத்தாள் குறித்து மாணவர் அதிருப்தி.

News image

தேர்வு முடிவு - Center-Center-Delhi

Updated On :29 ஜூன் 2026, 12:46 pm IST

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது முதல், இன்று வரை அது பேசுபொருளாகவே இருக்கிறது. மிக மோசமான குளறுபடிகள் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் வைரலான விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தும், ஒரு மதிப்பெண்ணும் கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சிபிஎஸ்இ இயற்பியல் விடைத்தாளில் பல்வேறு விடைகள் திருத்தப்படாமல் இருந்தது புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது. முதலில், வேறு மாணவர் எழுதிய விடைத்தாள் தனக்கு பகிரப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பிறகு தன்னுடைய விடைத்தாள் கிடைத்தபோது, அதில் பல விடைகள் திருத்தப்படாமல் இருந்தது.

பிளஸ் 2 மாணவர் வேதாந்த் ஸ்ரீவத்ஸவா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து விடைத்தாளை பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியான போது அவருக்கு கடும் அதிர்ச்சி. தன்னுடைய இயல்பியல் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தும், ஒரு மதிப்பெண்கூட அதிகரிக்கவில்லை. தான் 12 விடைகளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தும் ஒரு மதிப்பெண்ணும் கிடைக்கவில்லை.

தற்போது மொத்த மதிப்பெண்களில் வெறும் 2 மதிப்பெண் மட்டுமே அதிகரித்துள்ளது. கணிதத்தில், கணினி அறிவியலில் தலா ஒரு மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன என தன்னுடைய அதிருப்தியை வேதாந்த் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.